This Article is From Dec 19, 2018

நண்பன் விஜய்யும், மஹிந்திரா தலைவரும் வைரல் ட்வீட்

சோனம் வாங்சக் , ஹிமாலயன் இன்ஸ்டிட்யூட் அப் அல்டேர்னேத்திவ் என்னும் இன்ஸ்டிட்யூட் நடத்தி வருகிறார்.அங்கு தான் மகேந்திரா ஜீப்பை கூறையாக மாற்றி உள்ளார்

நண்பன் விஜய்யும், மஹிந்திரா தலைவரும் வைரல் ட்வீட்

மகேந்திரா ஜீப் ஒன்றை சோனம் வாங்சக் தனது இன்ஸ்டிட்யூட்டில் வீட்டின் கூறையாக பயன்படுத்தியுள்ளது குறித்து ட்வீட்டரில் சோனமும் அனந்தும் வைரல் ட்வீட் செய்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • நண்பன் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் சோனம் வாங்சக்கின் வாழ்க்கை ஆகும
  • சோனம் வாங்சக்கும் அனந்தும் பரிமாறிக்கொண்டனர்
  • மஹிந்திரா குழுமத்தின் தலைவர் அனந்த் மஹிந்திரா ஆவார்

3 இடியட்ஸ் ( தமிழில் நண்பன் ) படத்தில் கதாநாயகனின் கதாபத்திரத்திற்கு இன்ஸ்பிரேசனாக இருந்தவர் சோனம் வாங்சக். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் அனந்த் மஹிந்திரா ஆவார். இந்தநிலையில் மகேந்திரா ஜீப் ஒன்றை சோனம் வாங்சக் தனது இன்ஸ்டிட்யூட்டில் வீட்டின் கூறையாக பயன்படுத்தியுள்ளது குறித்து ட்வீட்டரில் சோனமும் அனந்தும் ட்வீட் செய்துள்ளனர்.

சோனம் வாங்சக் , ஹிமாலயன் இன்ஸ்டிட்யூட் அப் அல்டேர்னேத்திவ் என்னும் இன்ஸ்டிட்யூட் நடத்தி வருகிறார்.அங்கு தான் மகேந்திரா ஜீப்பை கூறையாக மாற்றி உள்ளார்.அதன் புகைபடத்தை பாராட்டி ட்வீட்டரில் பகிர்ந்த அனந்த் மஹிந்திரா, “ என்னுடைய நண்பன் ஒருவன் லடாக்கில் உள்ள சோனம் வாங்சக்கின்  ஹிமாலயன் இன்ஸ்டிட்யூட் அப் அல்டேர்னேத்திவில் இருந்து இந்த புகைபடத்தை அனுப்பினான். இது மிகவும் வியப்பளிக்கிறது. இந்த இன்ஸ்டிட்யூட்டில் எதையும் வீணடிக்காமல் அனைத்தையும் மாற்றி உபயோகிக்கிறார்கள்” என பாராட்டி ட்வீட் செய்தார்.

இதற்கு திங்கள் அன்று சோனம், இந்த மஹிந்திரா கூறையின் பின் கதையை விளக்கி ட்வீட் செய்தார்.

“மதிப்பிற்குரிய அனந்த், நீங்கள் ட்வீட் செய்த புகைபடத்துக்கு ஒரு சுவாரஸ்யமான பின் கதை உள்ளது. லடாக்கில் உள்ள தொலைதூர எல்லைகளுக்கு கல்வி பயில்விக்க பெரிதும் உதவிய வாகனம் இது. இதனால் தான் மெட்ரிக்குலேசன் முடிவுகள் 5 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக உயர்ந்தது” என சோனம் ட்வீட் செய்தார்.

மேலும் அந்த மஹிந்திர வாகனமானது அவரது இன்ஸ்டிட்யூட்டில்1997 முதல் 2007 வரை பயன்படுத்த பட்டதாகவும் சோனம் கூறினார்

சோனமின் ட்வீட்டிற்கு , அனந்த், சோனம் செய்து வரும் கல்வி சேவையை பாராட்டுவதாகவும் தானும் அந்த கல்வி சேவைக்கு உதவ இருப்பதால் அதன் விவரங்களை தருமாறு ட்வீட் செய்துள்ளார்.

சோனம் வாங்சக்கும் அனந்தும் பரிமாறிக்கொண்ட ட்வீட்களை பலர் வரவேற்று பாராட்டி உள்ளனர்

 

 

 

Click for more trending news


.