This Article is From Oct 31, 2018

விஜய் சேகர் சர்மாவை பிளாக்மெயில் செய்த சோனியா தவான் கைது பின்னணி!

இந்த மிரட்டல் பேடிஎம்மில் துணைத்தலைவராக பணிபுரியும் சோனியா தவான் மற்றும் அவரது கணவர் இவர்களோடு மேலும் ஒரு பே டிஎம் பணியாளர் ஆகியோரால் விடப்பட்டுள்ளது.

விஜய் சேகர் சர்மாவை பிளாக்மெயில் செய்த சோனியா தவான் கைது பின்னணி!

ஹைலைட்ஸ்

  • விஜய் சேகர் ஷர்மா, பே டிஎம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்
  • சோனியா தவான் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்
  • திருமதி தவான் பணம் பறிக்க கணவருடன் திட்டமிட்டுள்ளாக தெரியப்படுகிறது

நாட்டின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு ஒன்று உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. கடந்த மே மாதம் உள்ளூர் அரசியல்வாதிகள் சிலருக்கு 14,000 அமெரிக்க டாலர்கள் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. அதேபோல தற்போது இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான பே டிஎம்மின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. 

இந்த மிரட்டல் பே டிஎம்மில் துணைத்தலைவராக பணிபுரியும் சோனியா தவான் மற்றும் அவரது கணவர் இவர்களோடு மேலும் ஒரு பே டிஎம் பணியாளர் ஆகியோரால் விடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஷர்மாவின் சொந்த விவரங்களையும், சில ஆவணங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து போலிஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நொய்டாவில் உள்ள லக்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது வக்கீல் இந்த வழக்கில் இந்த மூவருக்கும் எந்த தொடர்புமில்லை. அவர்கள் தவறு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் பல மர்மமான கேள்விகள் நீடிக்கின்றன. சோனியா ஏன் தனது நிறுவனருக்கு எதிராக மாற வேண்டும். சோனியாவை இயக்குவது யார், எந்த மாதிரியான தகவல்கள் திருடப்பட்டுள்ளன.  பே டிஎம்முடன் சாஃப்ட் பேங்க் மற்றும் வாரன் பப்பெட் ஆஃப் பெர்க்ஷைர் ஹாத்வே ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.

காவல்துறையின் தகவலின் படி சோனிய தவான் மற்றும் வரது கணவ்ர் மேலும் இரண்டு பணியாளர்கள் இணைந்து ஷர்மாவின் தகவல்களை திருடுவதற்காக திட்டமிடுகின்றனர். சோனியாவின் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஷர்மாவின் தக‌வல்களை திருடியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

ஷர்மாவுக்கு செப்டம்பர் முதல்வாரத்தில் ஒரு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் உங்களது நிதி தகவல்கள் எங்களிடம் உள்ளது. அதற்கு 2.7 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதன் பின் காவல்துறையில் ஷர்மா கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் சோனியா சார்பாக ஆஜராகியுள்ள வக்கீல் இதில் சோனியாவுக்கு எந்த தொடர்புமில்லை. அவரது பெயரை வைத்து யாரோ இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் இவர்களை சிறையில் இருந்து ஜாமினில் எடுக்க வேண்டும் பின்னர் அவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே எங்கள் நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பே டிஎம் தெரிவித்துள்ள கருத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன என்று கூறியுள்ளது.  ஷர்மா கூறும்போது நான் அதிர்சியில் இருக்கிறேன் இதன் பின்னணியில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியவில்லை. விரைவில் அனைவரும் அடையாளம் காணப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.