ஹைலைட்ஸ்
- நேரு குறித்த ஒரு புத்தகத்தை சசி தரூர் இன்று வெளியிட்டார்
- இந்தியாவின் அரசியலை நிர்ணயித்தவர் நேரு: சோனியா
- நேரு குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகிறது, தரூர்
New Delhi: நாட்டின் முதல் பிரதமரும் இந்திய தேசத்தை உருவாக்கப் போராடியவருமான நேருவின் பெருமைகளைக் குறைக்கும் விதமாகவும் அவர் கட்டமைத்த தேசத்தை மோசமான நிலைக்குத் தள்ளுவதுமாக இன்றைய ஆட்சியாளர்கள் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சசி தரூரின் ‘நேரு- இந்தியாவின் கண்டுபிடிப்பு' என்ற புத்தகத்தை மறு பதிப்பு செய்து வெளியிடும் நிகழ்வில் சோனியா காந்தி கலந்து கொண்டார். அந்நிகழ்வில் பேசிய சோனியா காந்தி, ‘நாட்டின் முதல் பிரதமராக இந்திய ஜனநாயகத்தை தொகுத்தளித்தவர் நேரு. இன்றளவும் நாம் பெருமைப்படும் விதத்தில் இந்திய அரசியல் மதிப்புகளை மெருகேற்றியவர் அவர்.
நேருவின் முக்கிய அம்சங்களாக ஜனநாயகக் கட்டமைப்பு, இந்தியாவின் மதச்சார்பின்மை, சமூகப் பொருளாதாரம், அந்நிய கொள்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தி உள்ளார். ஆனால், இத்தனைக் காலமாக இந்தியாவின் தனித்துவங்களாக விளங்கிய அம்சங்களும் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் இந்த தனித்துவ அம்சங்கள் அனைத்தும் மிதிப்பிழந்து வருகின்றன.
இந்திய தேசத்தை உருவாக்க நேருவின் உழைப்பு அனைத்தும் அவமதிக்கப்பட்டு நாடு மோசமான திசையில் சென்று கொண்டிருக்கிறது.
இன்று மதிப்பிழந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தை நாம் தொடர் முயற்சியுடன் போராடி மீட்டெடுக்க வேண்டும்' என்றார்.
சசி தரூர் பேசுகையில், ‘ஒரு முறை அமெரிக்க பத்திரிகையாளர் வருங்காலம் குறித்துக் கேட்டபோது முதல் பிரதமரான நேரு “330 மில்லியன் மக்களும் அவர்களை அவர்களாகவே ஆளும் திறன் இருக்கும்” என்று உரைத்தாராம்.
நேரு உருவாக்கித் தந்த கட்டமைப்பின் மூலமாகத் தான் இன்று ஒரு டீக்கடைக்காரர் பிரதமராக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். ஆனால், இன்று நேருவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் இழிவான பொய் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன' என்றார்.