Read in English
This Article is From Mar 26, 2020

”அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்”: பிரதமருக்கு சோனியா கடிதம்

Coronavirus update: வங்கி கடன்களுக்காக கட்டப்படும் அனைத்து இஎம்ஐக்களையும், 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

Coronavirus update: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

Highlights

  • அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: பிரதமருக்கு சோனியா கடிதம்
  • நியாய் NYAY திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
  • இஎம்ஐக்களையும், 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி எழுதியுள்ள நான்கு பக்க கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் நாங்கள் முழுமையாக ஆதரிப்போம், அதற்கு முழு ஒத்துழைப்பும் அளிப்போம்.

தொடர்ந்து, வங்கி கடன்களுக்காக கட்டப்படும் அனைத்து இஎம்ஐக்களையும், 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். 

Advertisement
Advertisement