This Article is From Feb 27, 2020

டெல்லி வன்முறைக்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: சோனியா வலியுறுத்தல்

கடந்த ஒரு வாரமாக மத்திய உள்துறை அமைச்சர் என்ன செய்து வருகிறார்? இந்த வாரத்திற்கு முன்பு அவர் என்ன செய்தார்?

டெல்லி வன்முறைக்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: சோனியா வலியுறுத்தல்

ஹைலைட்ஸ்

  • டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்
  • டெல்லி வன்முறையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கடந்த ஒரு வாரமாக மத்திய உள்துறை அமைச்சர் என்ன செய்து வருகிறார்?
New Delhi:

டெல்லி வன்முறைச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: எனக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சோனியா காந்தி கூறியதாவது, கடந்த ஒரு வாரமாக மத்திய உள்துறை அமைச்சர் என்ன செய்து வருகிறார்?

இந்த வாரத்திற்கு முன்பு அவர் என்ன செய்தார்? நிலைமை மோசமாவதை அறிந்த உள்துறை அமைச்சகம் ஏன் துணை ராணுவத்தை முன்கூட்டியே அழைக்கவில்லை? எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து, மூன்றாவது நாளாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதுவரை இந்த வன்முறைக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

மத்திய அரசும், மத்திய உள்துறை அமைச்சருமே இந்த வன்முறைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேற்றிரவு வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, எந்தவொரு சட்டத்தையும் மதிக்கும் குடிமகனும் யாராலும் பாதிக்கப்படமாட்டான் என்று கூறினார். 

இதுதொடர்பாக அஜித் தோவால் என்டிடிவியிடம் கூறியதாவது, டெல்லி போலீசாரின் நோக்கத்தையும், திறன்களையும் மக்கள் சந்தேகிக்கின்றனர். முதலில் அது சரிசெய்யப்பட வேண்டும். சீருடையில் இருப்பவர்களை மக்கள் நம்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

.