This Article is From Nov 28, 2019

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்பார்களா?!! புதிய தகவலால் சர்ச்சை!

சிவசேனா ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்திருந்தார். தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சோனியா, ராகுலுக்கு உத்தவ் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Edited by

சோனியா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

New Delhi:

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பது குறித்து வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மாலை 6.40-க்கு பதவியேற்க உள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. 

தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் உள்ளிடோருக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். இதேபோன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தவின் பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Advertisement

மகாராஷ்டிராவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கேட்டது. அப்போது, காங்கிரஸ் உடனடியாக ஆதரவு அளித்திருந்தால் உத்தவின் பதவியேற்பு முன்கூட்டியே நடந்திருக்கும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். 

கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியில் வேறுபட்ட சிவசேனாவுக்கு பாஜக எதிர்ப்பு காரணமாக காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

3 கட்சிகள் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உள்ள சூழலில், இந்த ஆட்சி நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது என்று பாஜக உறுதியாக நம்புகிறது.

மகாராஷ்டிர விவகாரத்தில் சிவசேனா குறித்து காங்கிரசின் ராகுல் காந்தி கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்,'மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துள்ளது' என்று கண்டனம் தெரிவித்திருந்தார். 
 

Advertisement