காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதல் குறித்து தினம் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
New Delhi: சீனாவுடனான எல்லை பிரச்னை உட்பட நாடு தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடிக்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தவறான நிர்வாகமும், அவர்கள் பின்பற்றி வரும் தவறான கொள்கைகளுமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் உயர்மட்ட செயற்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி கூறும்போது, இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியாலும், தொற்றுநோய் பரவலாலும், தற்போது சீனாவுடனான எல்லை மோதாலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்படும் ஒவ்வொரு நெருக்கடிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தவறான நிர்வாகமும், அதன் தவறான கொள்கைகளுமே காரணமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதல் குறித்து தினம் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரசு நிலைமையை தவறாக கையாண்டுள்ளது என்ற உணர்வு மக்களிடையே அதிரித்து வருகிறது. வரும் காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால், முதிர்ச்சியுடன் சர்வதேச உறவுகளை நிர்வகிப்பதும், தொழில், செயல்பாடு உள்ளிட்டவற்றை நாட்டு பிரதிநிதி தீர்க்கமாக பாதுகாப்பதிலே அரசு நடவடிக்கையை தெரிவிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
லடாக்கில் நடந்த மோதலில் இந்திய வீர ர்கள் 20 பேர் உயிரிழந்தனர், 76 பேர் காயமடைந்தனர் இந்த விவகாரம் குறித்து கலந்தாலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றார்.
இதேபோல், காங்கிரஸ் தலைவர் கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாள்வது குறித்தும், நாட்டு பொருளாதார நிலை குறித்தும் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.