বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 17, 2019

குடியுரிமை சட்ட விவகாரம்: சோனியா தலைமையில் எதிர்க்கட்சியினர் குடியரசு தலைவருடன் சந்திப்பு!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இதுதொடர்பாக சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பேசினர்.

Advertisement
இந்தியா Edited by

எதிர்க்கட்சி தலைவர்களின் குழுவுக்கு சோனியா காந்தி தலைமை வகுத்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் சூழலில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பேசினர். இந்த எதிர்க்கட்சி தலைவர்களின் குழுவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார். 

குடியரசு தலைவரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது-

மக்களின் குரலை நசுக்குவதில் மோடி அரசு இரக்கம் காட்டுவதில்லை. டெல்லியில் ஜாமியா பெண்கள் விடுதியில் நடந்த போலீஸ் தாக்குதலையும், மாணவிகள் இழுத்து வீசப்பட்டதையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். காட்டு மிராண்டித்தனமான முறையில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

Advertisement

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரம் அடைந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் தற்போது பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயம். இன்னும் அதிகமாக இந்த போராட்டம் பரவிவிடுமோ என அச்சப்படுகிறோம். அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத் தக்கது.

இவ்வாறு சோனியா தெரிவித்தார். 

Advertisement

செய்தியாளர்கள் சந்திப்பின்போது காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஆகியோர் தங்களது மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று கூறியுள்ளனர். 

Advertisement

மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று சொல்வதற்கு மாநிலங்களுக்கு உரிமையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

கடந்த புதன்கிழமையன்று குடியுரிமை திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருக்கிறார். இது சட்டமாக வரவுள்ளது. இந்த சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014-க்கு முன்பு, மத பாகுபாடு காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. 

Advertisement

இந்த சட்டத்தை கண்டித்து டெல்லியின் கிழக்குப் பகுதியான சீலாம்பூரில் புதிதாக இன்று போராட்டங்கள் வெடித்தன. இதைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கண்ணிர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்புகாணப்பட்டது. 

இதற்கிடையே போராட்டக்காரர்கள் பேருந்து, போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றின் மீது கற்களை வீசியதாக புகார்கள் எழுந்துள்ளன. இதேபோன்று டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்திலும்போராட்டம் தொடர்ந்தது. 

Advertisement

நேற்று நடந்த போராட்டத்தின்போது ஜாமியா மில்லியா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. கற்கள் வீசப்பட்டதுடன், பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அனுமதியின்றி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த போலீசார் மாணவர்களை கைது செய்தனர். இதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. 

Advertisement