This Article is From Feb 27, 2020

அமித் ஷா பதவி விலகணுமா.. ”சிரிப்பு வருது“: சோனியாவை கலாய்த்த ஜவடேகர்!

தலைநகர் டெல்லியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அமித் ஷா தொடர்ந்து, போலீசாருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா பதவி விலகணுமா.. ”சிரிப்பு வருது“: சோனியாவை கலாய்த்த ஜவடேகர்!

சோனியா காந்தி வன்முறையை அரசியலாக்குவதாக பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார். (File)

ஹைலைட்ஸ்

  • வன்முறையை அரசியலாக்குவது மோசமான அரசியல் என ஜவடேகர் விமர்சனம்
  • அமித் ஷா பதவி விலக வேண்டுமா? நகைப்புக்குறியது..
  • குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது.
New Delhi:

டெல்லி வன்முறைச் சம்பவத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அமித் ஷா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது ”நகைப்புக்குரியது” என்று அவர் கிண்டல் செய்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், தலைநகர் டெல்லியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அமித் ஷா தொடர்ந்து, போலீசாருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

டெல்லியில் நடந்த வன்முறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன. தொடர்ந்து, உண்மை என்ன என்பதைக் கண்டறியவும், குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறியவும் விசாரணை நடந்து வருகிறது.

குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. இது போன்ற சூழ்நிலைகளில் அரசு குறித்து விமர்சித்து வன்முறையை அரசியலாக்குவது என்பது ”மோசமான அரசியல்” என்று அவர் கூறியுள்ளார். 

டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து ஆலோசிக்கக் காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சி கூட்டத்திற்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். அப்படி இருக்கும் போது, அமைதியை நிலைநாட்ட வேண்டியது அனைத்து கட்சிகளின் பொறுப்பு என ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் 1984 சீக்கியர்கள் கலவரத்தைக் குறிப்பிட்டு அப்போது காங்கிரஸ் தான் ஆட்சியிலிருந்தது என்றும் பதிலடி கொடுத்துள்ளார். 

முன்னதாக, டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சோனியா காந்தி, கடந்த ஒரு வாரமாக மத்திய உள்துறை அமைச்சர் என்ன செய்து வருகிறார்? நிலைமை மோசமாவதை அறிந்த உள்துறை அமைச்சகம் எதற்காகத் துணை ராணுவத்தை முன்கூட்டியே அழைக்கவில்லை? எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். 

மேலும், டெல்லி வன்முறைச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். 

.