This Article is From Jul 08, 2019

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி சோனியா காந்தியை சந்தித்த ராஜ் தாக்கரே!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா போட்டியிடவில்லை. இருப்பினும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டது.

சோனியா காந்தியை சந்தித்த ராஜ் தாக்கரே

New Delhi:

மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் சேர்மன் சோனியா காந்தியை எம்.என்.எஸ். தலைவர் ராஜ் தாக்கரே டெல்லி இல்லத்தில் சந்தித்து பேசினார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எம்.என்.எஸ். மகாராஷ்டிராவில் போட்டியிடவில்லை. இருப்பினும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. 

ஓட்டு மெஷின் மூலம் வாக்குகள் பதிவதை எதிர்ப்பதில் எம்.என்.எஸ். தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து ராஜ் தாக்கரே வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். 

மக்களவை தேர்தலின்போது அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியை எதிர்த்து ராஜ் தாக்கரே பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. 

சோனியா காந்தியை ராஜ் தாக்கரே சந்திப்பது என்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க அவர் சோனியாவை சந்தித்திருந்தார். 

மகாராஷ்டிர தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா ஆகியோர் இடையே கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

.