குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Chandigarh: போக்கு வரத்து விதியை மீறிச்சென்ற இளைஞர்கள மீது நடவடிக்கை எடுக்க முயன்ற காவலர் ஒருவர், பைக்கில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அரியானாவில் நடந்திருக்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோனிபத் மாவட்டத்தின் மகாரானா பிரதாப் சவுக்கில் ஜெய்தீப் என்ற காவலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது 3 இளைஞர்கள் ஒரே பைக்கில் வந்துள்ளனர். அவர்களை ஜெதீப் நிறுத்தச் சொன்னபோது பின்னால் இருந்த 2 பேர் காவலரை பிடித்தக் கொண்டனர்.
முன்னால் இருந்தவர் வண்டியை வேகமாக இயக்க, காவலர் ஜெய்தீப் தரையில் இழுத்துக் கொண்டு செல்லப்பட்டார்.
சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற பின்னர் ஜெய்தீப்பை விட்டு விட்டு 3 பேரும் பைக்கில் பறந்தனர்.
ஜெய்தீப் ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டபோது அதனை சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். இவை வைரலாகி வருகின்றன.
குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.