This Article is From Dec 27, 2019

“புதுச்சேயில் வருகிறது கேசினோ!”- முதல்வர் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு; மல்லுக்கட்டும் ஆளுநர்!

Puducherry - 'சுற்றுலா மாநிலமாக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் விரும்புவதை கொடுப்போம். அதற்கு தேவையான விதிமுறைகளை கொண்டு வருவோம்’

“புதுச்சேயில் வருகிறது கேசினோ!”- முதல்வர் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு; மல்லுக்கட்டும் ஆளுநர்!

Puducherry - "கோவாவில் கேசினோ இருக்கிறது. அங்குள்ள பாஜக அரசிடம் கேசினோவை முட சொல்வாரா கிரண்பேடி அம்மையார்?"

Puducherry - புதுச்சேரி மாநிலத்தில் அரசு விதிமுறைகளுடன் கேசினோ கொண்டு வரப்படும் என்ற புதிய ‘பகீர்' கிளப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் நாராயணசாமி. 

ஏற்கெனவே எடுத்ததற்கெல்லாம் மல்லுக்கட்டும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, இந்த விவகாரத்திலும் மூக்கை நுழைத்துள்ளார். கிரண்பேடி தனது சமூக வலைதள பக்கங்களில் புதுவை மாநில அரசின் கொள்கைகளை விமர்சித்துப் பதிவிட, அதற்கு பதிலடி கொடுப்பது போல நாராயணசாமி எதிர்வாதம் வைக்கிறார். 

இன்று நாராயணசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் விதிமுறைகளுடன் கேசினோ கொண்டு வரப்படும். யூனியன் பிரதேசங்களில் நிர்வாகம், மனித வள மேம்பாடு, சட்டம்-ஒழுங்கு, நீதி நிர்வாகம், மருத்துவம் ஆகிய 4 துறைகளில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.

vvs9b0co

விவசாயத்தில் புதுச்சேரி  இரண்டாவது இடம். புதுச்சேரியில் மூன்றரை ஆண்டுகளாக மத்திய அரசின் நிதி கிடைக்காத சூழ்நிலையிலும் மத்திய அரசின் உதவியின்றி 5 விருதுகளை பெற்றுள்ளோம்.

அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட்டால் இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெறுவோம். தனக்கு அதிகாரம் இல்லாததால் கிரண்பேடி அம்மையார் அவர்கள் அதிகாரிகளை அழைத்து மிரட்டுகிறார். கிரண்பேடி அம்மையார் அவர்கள் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் நாங்கள் சாதனைகளை செய்வோம்' என்று அதரிடியாக பதிவிட்டுள்ளார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொனியில் கிரண்பேடி, “சில உள்நோக்கம் கொண்ட சக்திகள், புதுச்சேரியை சூதாடும் இடமாகவும், மது போதைக்கு உட்பட்ட இடமாகவும் மாற்றப் பார்க்கின்றன. புதுச்சேரி பாதுகாப்புடன் இருக்கட்டும்,” என்றுள்ளார். 

இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாராயணசாமி, ‘மாநில வருவாயை பெருக்க கிரண்பேடி அம்மையார் அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. கோவாவில் கேசினோ இருக்கிறது. அங்குள்ள பாஜக அரசிடம் கேசினோவை முட சொல்வாரா கிரண்பேடி அம்மையார்?

சுற்றுலா மாநிலமாக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் விரும்புவதை கொடுப்போம். அதற்கு தேவையான விதிமுறைகளை கொண்டு வருவோம்' என்று கருத்திட்டுள்ளார். 


 

.