This Article is From May 31, 2018

ஜெயலலிதாவின் இறுதி ஆடியோ டேப்பை வெளியிட்ட விசாரணை கமிஷன்

ஜெ. ஜெயலலிதா மருத்துவர்களிடம் தன் உடல் நிலை குறித்து பேசும் ஆடியோ ஒன்றை விசாரனை கமிஷன் வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இறுதி ஆடியோ டேப்பை வெளியிட்ட விசாரணை கமிஷன்

ஜெயலலிதா மருத்துவர்களிடம் தன் உடல் நிலை குறித்து பேசும் ஆடியோ ஒன்றை விசாரனை கமிஷன் வெளியிட்டுள்ளது

Chennai: முன்னாள் முதல் அமைச்சர் ஜெ. ஜெயலலிதா மருத்துவர்களிடம் தன் உடல் நிலை குறித்து பேசும் ஆடியோ ஒன்றை விசாரனை கமிஷன் வெளியிட்டுள்ளது.   75 நாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா டிசம்பர் 2016ல் இறந்தார், அவரது இறப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

1.07 நிமிடம் உள்ள இந்த ஆடியோவில், ஜெயலலிதா இரும்பிக்கொண்டே பேசுகிறார். மேலும் மூச்சு விடும் பொழுது திரையரங்கில் ரசிகர்கள் விசில் அடிப்பது போன்று கேட்கிறது என்கிறார். அவரது மருத்துவர் கே எஸ் சிவகுமார் இடம் இந்த சத்தத்தை மொபைலில் பதிவு செய்ய முடிந்தால் பண்ணுங்கள் முடியாது என்றால் விட்டுவிடுங்கள் என தெரிவிக்கிறார். 

மேலும் 140-80 என இருக்கும் தனது இரத்த அழுத்தம் இயல்பானது தான் என தன் மருத்துவரிடம் தெரிவிக்கிறார். 

அடுத்த 33 நொடி இருக்கும் ஆடியோவில், சிரமப்பட்டு மூச்சு விடும் ஜெயலலிதாவிடம் இப்பொழுது "மூச்சு தீவிரமாக இல்லை" என மருத்துவர் தெரிவிக்கிறார். அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, வீசிங் இருக்கும் பொழுது நான் சொன்னேன், நீங்கள் பதிவு செய்ய முடியாது என்றீர்கள் என்றார். 

இந்த ஆடியோ பதிவு, செப்டம்பர் 27, 2016 எடுக்கப்பட்டதாக மருத்துவர் சிவக்குமார் விசாரணை கமிஷன் நீதிபதி அ ஆறுமுகசாமியிடம் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவால் பச்சை மையில் கைப்பட எழுதிய உணவு விளக்கப்படமும் விசரனை கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

விளக்கப்படம் படி, அவரின் எடை 106.49 கிலோ எனவும் காலை 4.55 மணிக்கு "தாமரை தண்ணீர்", 5.05 - 5.35 குள் காலை உணவு  ஒரு இட்லி, ரொட்டி நான்கு துண்டுகள், தேங்காய் தண்ணீர் 230 மில்லி மற்றும் 400 மில்லி காபி எடுத்துக்கொள்ள வேண்டும் என போடப்பட்டிருந்தது. 

2-2.35 எடுக்கப்படும் மதிய உணவு ஒன்றரை கப் பாசுமதி சாதம், ஒரு கப் தயிர், கிர்ணி பழம் என அவர் எழுதி இருந்தார். அத்துடன் இரவு 6.30-7.15 க்கு எடுக்கபப்டும் உணவு அக்ருட் மற்றும் உலர் பழங்கள் (1/2 கப்), இட்லி அல்லது உப்புமா ஒரு கப், ஒரு தோசை, ரொட்டி இரண்டு துண்டுகள், பால் 200 மிலி மற்றும் நீரிழிவு மாத்திரைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

தூத்துக்குடி போராட்டத்தில் இருந்து திசை திருப்பவே இந்த நேரத்தில் இந்த பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 
.