Read in English
This Article is From Sep 06, 2019

நடந்த திருட்டு சம்பவத்திற்கு விமான நிறுவன அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் - செளந்தர்யா ரஜினிகாந்த்

மறுநாள் காவல்துறை பதில் கொடுத்துள்ளது. விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பழுதானது என்றும் அதனால் அதில் எந்தவொரு காட்சிகளும் பதிவு பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement
Entertainment Translated By

செளந்தர்யா ரஜினிகாந்த் (Image courtesy: soundaryaarajni)

Highlights

  • விமான நிறுவன அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.
  • தன்னுடைய ஹேண்ட்பேக்கை காருக்காக காத்திருக்கும் லாஞ்சில் தொலைத்துள்ளார்.
  • ஹித்ரூ விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது
New Delhi:

ரஜினிகாந்தின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றம் அவருடைய கணவருமான விசாகன் வணங்காமுடி இருவரின் முக்கிய ஆவணங்கள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களும் இருந்த ஹேண்ட் பேக் ஒன்று ஹீத்ரூ விமான நிலையத்தில் திருடு போனது. 

இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றினை செய்த செளந்தர்யா ரஜினிகாந்த் “ இந்த சம்பவத்திற்கு விமான நிலைய அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.” என்று அதில் தெரிவித்துள்ளார். செளந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய ஹேண்ட்பேக் ஹீத்ரூ ஏர்போர்ட்டில்  செப்.1, 2019இல் திருடு போனதாக கூறியுள்ளார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மறுநாள் காவல்துறை பதில் கொடுத்துள்ளது. விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பழுதானது  என்றும் அதனால் அதில் எந்தவொரு காட்சிகளும் பதிவு பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த சம்பவத்திற்கு விமான நிறுவனமும் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டுமென கூறியுள்ளார். எமிரேட்ஸ் விமான நிறுவனத்தை டேக் செய்து தன்னுடைய பதிவினை செய்துள்ளார்.

Advertisement

தனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் ஒரு பகுதியை ஸ்கீரின் ஸாட்டாக போட்டுள்ளார்

Advertisement