Read in English
This Article is From Jul 27, 2019

தெற்காசியாவில் இந்தியா உள்பட 4 நாடுகளில் வெள்ளம் - 2.50 கோடி பேர் பாதிப்பு!!

இந்தியாவில் அசாம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஐ.நா. நிறுவனங்கள் நிவாரண பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement
உலகம் Edited by

இந்தியாவில் மட்டும் 43 லட்சம் குழந்தைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

United Nations:

தெற்காசியாவில் கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தியா, நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 600 பேர் உயிரிழந்துள்ளனர். 2.50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரஸின் செய்தி தொடர்பாளர் பர்கான் ஹக் கூறியுள்ளார். இந்தியாவில் அசாம், பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

வெள்ளத்தால் அசாமில் மட்டும் 2000 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன. இந்த 4 நாடுகளில் ஐ.நா. நிறவனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தெற்காசிய பகுதி முழுவதுமே கடந்த சில வாரங்களாக வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. 

இங்கு கணிக்க முடியாத அளவுக்கு வானிலை நிலவுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. குறிப்பாக  அதிக வெப்பநிலையில், கடுமையான மழை போன்றவை தெற்காசிய பகுதியில் ஏற்படுகின்றன. இதற்கு மனித செயல்களால் ஏற்பட்ட பருவநிலை மாற்றமே காரணம் என்று ஐ.நா. கூறியுள்ளது. 

Advertisement

இதற்கிடையே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் அமெரிக்கா கேர்ஸ் நிறுவனம் தெற்காசியாவில் நிவாரண பணிகளை தொடங்கியுள்ளது. மும்பையை மையமாக கொண்டு மருத்துவ உதவிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளை செய்கிறது. கடும் பாதிப்புக்கு மத்தியில் உயிர் பிழைத்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளிக்க முன்னுரிமை அளிக்கப்படுவதாக அமெரிக்கா கேர்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீபாத் தேசாய் கூறியுள்ளார். 
 

Advertisement