This Article is From Oct 20, 2018

இன்றுடன் முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம்

இந்திய அளவில் பெரும் மழை பொழிவை கொண்டு வரும் தென்மேற்கு பருவமழை, இன்றுடன் முடிவுக்கு வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

இன்றுடன் முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம்

இந்திய அளவில் பெரும் மழை பொழிவை கொண்டு வரும் தென்மேற்கு பருவமழை, இன்றுடன் முடிவுக்கு வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை, ஜூன் 1 ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும். ஆனால், அது முழுவதுமாக விடைபெற செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு 2 வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான், இன்றுடன் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக விடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும். அது தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரிக்கு நல்ல மழைப் பொழிவைத் தரும்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், ‘தென்மேற்கு பருவமழை முழுவதுமாக நாட்டிலிருந்து விடைபெறவில்லை. ஆனால் அக்டோபர் 20 ஆம் தேதியுடன் அது விடைபெற்று விடும் என்று எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தான், இந்தியாவின் பிரதான மாநிலங்களுக்கு மழை பொழிவை கொண்டு வரும். விவசாயம் மட்டும் அல்லாமல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஜிடிபி-யிலும் தென்மேற்கு பருவமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை, நீண்ட நாள் சராசரியை ஒப்பிட்டால் 91 சதவிகிதம் தான் மழை பொழிவைத் தந்துள்ளது. இது ‘சராசரிக்கும் சற்று குறைவான' மழை பொழிவாக பார்க்கப்படுகிறது. கிழக்கு, வட கிழக்கு மாநிலங்களில் இந்த முறை மழை பொழிவு குறைவாக இருந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் இந்த முறை தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை எனப்படுகிறது. ஆனால், கேரளாவின் வரலாறு காணாத மழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.