This Article is From Jul 08, 2020

சம்பள பாக்கியை கேட்டு முதலாளி வீட்டிற்கு சென்ற ஊழியரை நாயை விட்டு கடிக்க விட்ட கொடூரம்!

இதுதொடர்பாக அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த அந்த பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியதாவது, சரியாக கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை ஒன்றரை மாதமாக அந்த அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த நான், மார்ச்.22ம் தேதி பணியிலிருந்து விலகினேன்.

சம்பள பாக்கியை கேட்டு முதலாளி வீட்டிற்கு சென்ற ஊழியரை நாயை விட்டு கடிக்க விட்ட கொடூரம்!

சம்பள பாக்கியை கேட்டு முதலாளி வீட்டிற்கு சென்ற ஊழியரை நாயை விட்டு கடிக்க விட்ட கொடூரம்!

ஹைலைட்ஸ்

  • முதலாளி வீட்டிற்கு சென்ற ஊழியரை நாயை விட்டு கடிக்க விட்ட கொடூரம்
  • அந்த பெண்ணின் முகம் மற்றும் கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளன.
  • குற்றாவளியை கைது செய்துள்ளதாக காவல் அதிகாரி அதுல் குமார் தெரிவித்துள்ளார்
New Delhi:

டெல்லியில் சம்பள பாக்கியை கேட்டு உரிமையாளர் வீட்டிற்கு சென்ற ஊழியர் ஒருவரை நாயை விட்டு கடிக்க விட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, டெல்லி மால்வியா நகரில் கடந்த ஜூன் 11ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த ஊழியரின் முகம் மற்றும் கழுத்தில் குறைந்தது 15 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த அந்த பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியதாவது, சரியாக கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை ஒன்றரை மாதமாக அந்த அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த நான், மார்ச்.22ம் தேதி பணியிலிருந்து விலகினேன். 

இதையடுத்து நான் எனது பாக்கி சம்பளத்தை ஜூன் 11ம் தேதி கேட்டபோது, அழகு நிலைய உரிமையாளர் ரஜினி அவரது இல்லத்திற்கு வரும்படி கூறினார். 

இதைத்தொடர்ந்து, அவரும் கிர்கி பகுதியில் உள்ள உரிமையாளர் வீட்டிற்கு அந்த பெண் சென்றுள்ளார். அப்போது அவர், தொடர்ந்து, பணியை தொடருமாறு வலியுறுத்தியுள்ளார் அப்போது தான் சம்பளத்தை தர முடியும் என்று கூறியுள்ளார். எனினும், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, அந்த பெண்ணை மிரட்டிய உரிமையாளர் ரஜினி, தனது நாயை விட்டு அந்த பெண்ணை கடிக்க விட்டுள்ளார் என்று அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை தொடர்ந்து, குற்றாவளியை கைது செய்துள்ளதாக காவல் அதிகாரி அதுல் குமார் தெரிவித்துள்ளார். 

நாய் கடித்ததில் அந்த பெண் அலறும் போது, உரிமையாளர் ரஜினி சத்தம்போடக்கூடாது அக்கம்பக்கத்தினர் உனது அழுகை சத்தத்தை கேட்டு கூடிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்ற அந்த பெண்ணின் முகம் மற்றும் கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. எனது சம்பள பாக்கியை அவர் ஏன் தருவதற்கு மறுத்தார் என்று எனக்கு தெரியவில்லை என்று பரிதாபமாக அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.