This Article is From Jun 08, 2018

பெண்கள் நிறைந்த ஸ்பெயின் நாடாளுமன்றம்!

ஸ்வீடன் நாட்டுக்குப் பின்னர் ஒரு நாட்டின் அமைச்சரவையில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது ஸ்பெயின் நாட்டில் தான்

பெண்கள் நிறைந்த ஸ்பெயின் நாடாளுமன்றம்!

ஹைலைட்ஸ்

  • அரசர் ஆறாம் பிலிப் தலைமையிலான அரசு உயர்பதவிகளில் பெண்கள்
  • 11 பெண்களை நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளுக்காகப் பரிந்துரை
  • ஸ்வீடனுக்கு அடுத்து ஸ்பெயின் நாட்டில்தான் பெண்களுக்கு முக்கியத்துவம்
Madrid: ஸ்பெயினில் முதன் முறையாக அரசர் ஆறாம் பிலிப் தலைமையில் அமைந்துள்ள அரசாங்கத்தில் பெரும்பான்மையான உயர் பதவிகளில் பெண்களே உள்ளனர்.

சமூக பிரதமர் பெட்ரோ சான்செஸ்  11 பெண்களை நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளுக்காகப் பரிந்துரை செய்தார். இப்பதவிகளில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட மிகவும் உயர்ந்த அமைச்சரவைகள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன.

ஸ்வீடன் நாட்டுக்குப் பின்னர் ஒரு நாட்டின் அமைச்சரவையில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது ஸ்பெயின் நாட்டில் தான். ஸ்வீடனில் அமைச்சரவையில் 12 பெண்கள் உள்ளனர். இதுவே ஸ்பெயின் அமைச்சரவையில் 11 பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்.

350 இடங்கள் உள்ள அமைச்சரவையில் 84 இடங்கள் சமூக நீதிக்கட்சிக்காக உள்ளது. 1970 –ம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்பானிஷ் அரசாங்கம் ஒன்று இவ்வளவு சிறிய அளவில் அமைவது இதுவே முதல்முறை ஆகும். 46 வயதான் சான்செஸ் கடந்த வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நடந்த போது அப்போதைய பிரதமர் மாரியனா ரஜோய் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இதற்கு முந்தைய ஆட்சி ஊழல் குற்றச்சாட்டுகளாலே வீழ்ந்தது என்பது வரலாறாக உள்ளது. புதிய பிரதமரின் பதவி ஏற்பு விழா என்பது வழக்கமான நடைமுறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மதக் கோட்பாடுகள் இல்லாமல் மத அடையாளங்களான பைபிள், சிலுவை என பாரம்பரிய வழக்கத்தை விடுத்து நடைபெற உள்ளது சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.

மக்கள் நலனுக்காக ஜனநாயக் முறையில் ஸ்பெயின் அரசு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.