This Article is From Jul 24, 2018

22 ஆண்டுகளுக்கு பின்னர், மகளை சந்தித்த தாய்

22 ஆண்டுகளுக்கு பிறகு மகளை சந்தித்த தாயார், மகிழ்ச்சியில் கட்டி தழுவி அழும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன

22 ஆண்டுகளுக்கு பின்னர், மகளை சந்தித்த தாய்

பூனே ஶ்ரீவட்சாவா காப்பகத்தில் இருந்த 14 மாத பெண் குழந்தையை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மர்டி ராமன் - கிரேசியா என்ற தம்பதியினர் தத்தெடுத்து சென்றனர். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அதே காப்பகத்தில் இருந்து ஒரு வயது ஆண் குழந்தையை அந்த தம்பதியினர் தத்தெடுத்து சென்றனர்.

ஜீனத் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் குழந்தை, தனது பள்ளி, கல்லூரி படிப்பை ஸ்பெயின் நாட்டில் பெற்றுள்ளார். மூன்று ஆண்டுகள் ஹோட்டலில் பணிபுரிந்து, பணம் சேமித்து இந்தியா திரும்பிய ஜீனத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் ஒரு தகாத உறவால் பிறந்த குழந்தை என்பது ஜீனத்திற்கு தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த சனிக்கிழமை அன்று, தன்னை பெற்றெடுத்த தாயாரை ஜீனத் சந்தித்துள்ளார். 22 ஆண்டுகளுக்கு பிறகு மகளை சந்தித்த தாயார், மகிழ்ச்சியில் கட்டி தழுவி அழும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன. ஸ்பெயினில் வளர்ந்த ஜீனத்திற்கு ஸ்பானிஷ், ஆங்கில மொழிகள் மட்டுமே தெரிந்து இருந்தது. இதனால், ஹிந்தி மொழி மட்டும் தெரிந்த தாயாரிடம் உரையாடுவது கடினமாக இருந்தது.

nroqh338

“என்னுடைய 21வது வயதில், உறவுக்காரர் ஒருவரின் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். நான் கருவுற்றதும், என் பெற்றோர்கள் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். இருப்பினும், என் குழந்தையை காப்பாற்ற முழு முயற்சி எடுத்தேன்” என்று ஜீனத்தின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்

“அம்மாவை நான் மறக்க மாட்டேன். எனக்கு உதவி செய்த காப்பகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அடுத்த ஆண்டு, மீண்டும் இந்தியா வரும் போது கண்டிப்பாக ஹிந்தி மொழி கற்றுக் கொள்வேன்” என்றார் ஜீனத். 22 ஆண்டுகளுக்கு பிறகு தாய் - மகள் சந்தித்ததை கண்டு அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.