This Article is From Dec 13, 2019

சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது: பாஜக எம்.பி பேச்சு

கம்ப்யூட்டர் புரோகிராமிங் சமஸ்கிருத மொழியில் செய்யப்பட்டிருந்தால் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமல் மிகச் சரியாக இருந்திருக்கும் என நாசா கூறியதாக பாஜக எம்.பி கணேஷ் கூறியுள்ளார்.

சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது: பாஜக எம்.பி பேச்சு

சமஸ்கிருதத்தில் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும் என பாஜக எம்.பி கணேஷ் சிங் கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • BJP MP Ganesh Singh says speaking Sanskrit boosts the nervous system
  • NASA found Sanskrit will make computer programming flawless, he said
  • More than 97% of languages in the world are based on Sanskrit, he said
New Delhi:

தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படுவதுடன், சர்க்கரை நோய், கொழுப்பு கட்டுக்குள் இருக்கும் எனவும் அமெரிக்காவை சேர்ந்த கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி கணேஷ் சிங் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக எம்.பி கணேஷ் சிங் பேசும்போது, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆய்வின்படி, கம்ப்யூட்டர் புரோகிராமிங் சமஸ்கிருத மொழியில் செய்யப்பட்டிருந்தால் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமல் மிகச் சரியாக இருந்திருக்கும் என்று கூறினார். 

மேலும், உலகில் உள்ள சில இஸ்லாமிய மொழிகள் உட்பட 97 சதவீதத்திற்கும் அதிகமான மொழிகள் மஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டு உருவானவை என்றார். 

தொடர்ந்து, இந்த மசோதா குறித்து சமஸ்கிருதத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி, சமஸ்கிருத மொழி மிகவும் நெளிவு சுழிவுகள் நிறைந்த மொழி. ஒரே வாக்கியத்தை பல வழிகளில் பேச முடிகிறது என்றார். 

மேலும், Brother, Cow போன்ற பல ஆங்கில வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை என்ற அவர், இதுபோன்ற தொன்மையான மொழியை ஊக்குவிப்பதால், வேறு எந்த மொழியையும் பாதிக்காது என்றும் கூறியுள்ளார். 

.