This Article is From May 30, 2019

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி: வாரணாசியில் இருந்து வரும் 250 ஸ்பெஷல் கெஸ்ட்!

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, காசிக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி: வாரணாசியில் இருந்து வரும் 250 ஸ்பெஷல் கெஸ்ட்!

வாரணாசியில் இருக்கும் பெரும்பான்மையான சிறப்பு விருந்தினர்கள், புதன் கிழமையே டெல்லிக்குப் புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

Varanasi:

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடக்க உள்ளது. இதையொட்டி, மோடி வெற்றிபெற்ற தொகுதியான வாரணாசியில் இருந்து 250 சிறப்பு விருந்தினர்களுக்கு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் 250 பேரும் பதவியேற்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு என்று பிரத்யேகமாக ‘காசி சங்குல்' என்ற கேலரி ராஷ்டிரபதி பவனில் உருவாக்கப்பட்டுள்ளதாம். 

இது குறித்து வாரணாசி பகுதி பாஜக துணைத் தலைவர், தர்மேந்திர சிங், ‘பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் இறுதிப் பட்டியல் எங்களுக்கு புதன் கிழமை கிடைத்தது. இதையடுத்து சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்புப் பத்திரிகை சரியாக சென்று சேர்வதை நாங்கள் உறுதி செய்தோம். சிறப்பு விருந்தினர்கள் டெல்லிக்குச் செல்ல ஏதுவாக ரயில்களில் கூடுதல் பெட்டி பொருத்தப்பட்டுள்ளது' என்று தகவல் தெரிவித்துள்ளார். 

வாரணாசியில் இருக்கும் பெரும்பான்மையான சிறப்பு விருந்தினர்கள், புதன் கிழமையே டெல்லிக்குப் புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. வாரணாசி சிறப்புப் பட்டியலில் பத்மா விருதுகள் வென்ற சன்னுலால் மிஸ்ரா, பிரஷாந்தி சிங், உள்ளிட்டோர் இருக்கின்றனர். 

இது குறித்து பாஜக தரப்பு, “பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வாரணாசியில் இருந்துதான் அதிகம் பேர் கலந்து கொள்கிறார்கள். காசி சங்குல் என்கிற பிரத்யேக இடத்தில் அவர்கள் அனைவரும் அமர்வர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, காசிக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 


 

.