This Article is From Oct 29, 2018

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நவம்பர் 5-ம்தேதி அரசு விடுமுறை

தீபாவளிப் பண்டிகை நவம்பர் 6-ம்தேதி செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்படவுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நவம்பர் 5-ம்தேதி அரசு விடுமுறை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நவம்பர் 5-ம் தேதி அதாவது, தீபாவளிக்கு முந்தைய நாளை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. வெளியூர்களில் வசிப்போர் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன. அவற்றை பரிசீலித்த தமிழக அரசு இந்த முடிவினை எடுத்திருக்கிறது. 

இதன்படி, தமிழகத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் நவம்பர் 5-ம் தேதி திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 10-ம் தேதியான சனிக்கிழமையை வேலை நாளாக தமிழக அரசு அறிவித்து அரசானை வெளியிட்டுள்ளது. 

நவம்பர் 5-ம் தேதி திங்களன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை மக்களுக்கு கிடைத்துள்ளது.

.