বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 28, 2020

டெல்லி வன்முறையை விசாரிக்க 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைப்பு!!

டெல்லியில் கடந்த ஞாயிறு முதல் வடகிழக்கு பகுதியில் கலவரம் நடந்து வருகிறது. இதில் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 38-யை எட்டியுள்ளது. 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • துணை ஆணையர்கள் தலைமையில் சிறப்பு விசாரணை குழுக்கள் செயல்படும்
  • வன்முறையாளர்களிடமிருந்து 50 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
  • வாட்ஸ்ஆப் மூலம் கலவரம் ஒருங்கிணைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
New Delhi:

நாட்டையே உலுக்கியுள்ள டெல்லி கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

டெல்லியில் கடந்த ஞாயிறு முதல் வடகிழக்கு பகுதியில் கலவரம் நடந்து வருகிறது. இதில் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 38-யை எட்டியுள்ளது. 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 

இரு சிறப்பு விசாரணைக் குழுவுக்கும் காவல்துறை துணை ஆணையர்கள் 2 பேர் தலைமை வகிப்பார்கள். ஆயுதங்கள், கட்டைகள், கற்களுடன் வன்முறையில் ஈடுபட்டவர்கள், சொத்துக்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர்கள், சூறையாடியவர்கள், குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

டெல்லி கலவரம் தொடர்பாக 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

தற்போது கலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. 

கலவரத்திற்குப் பின்னணியில் மிகப்பெரும் சதி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 50 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Advertisement

இதன் மூலம் கலவரக்காரர்கள் வாட்ஸ்ஆப் குழுக்களை அமைத்து கலவரத்தை ஒருங்கிணைத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 

ஞாயிறன்று தொடங்கிய கலவரத்தால் வடகிழக்கு டெல்லி போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சி.பி.எஸ்.இ. தேர்வுகள் 4 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement