This Article is From Aug 10, 2020

சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்!

இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Posted by

சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்!

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் தந்தை - மகன் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 10 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எஸ்.ஐ. பால்துறை என்பவரும் கடந்த ஜூலை 8ம் தேதி கைதுசெய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பால்துறை உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் 14ம் தேதி அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த மாதம் 24ம் தேதி பால்துறைக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். பால்ராஜூக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், கொரோனாவால் அவரது உடல்நிலை மோசமானது. 

Advertisement

இதைத்தொடர்ந்து, 8ம் தேதி அவசர சகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு உயிரிழந்தார். 

முன்னதாக, பால்ராஜின் மனைவி தனது கணவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், இதனால் கணவரின் உடல் உறுப்புகள் செயல் இழந்து வருவதோடு, அவர் சுயநினைவையும் இழந்துவிட்டதாகவும், அதனால் அவருக்கு ஜாமீன் வழங்குவதோடு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். 

Advertisement
Advertisement