மும்பை மருத்துவமனைக்கு வெளியில் அர்ஜூன் ராம்பால் மற்றும் கேப்ரியல்லா.
ஹைலைட்ஸ்
- அர்ஜூன் மற்றும் கேப்ரியல்லாவின் முதல் குழந்தை இது
- அர்ஜூன் தன் மனைவி மெஹர் ஜெசியாவுடன் பிரிவில் உள்ளார்.
- 20 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்தது
New Delhi: நடிகர் அர்ஜூன் ராம்பால் மற்றும் கேப்ரியல்லா டெமட்ரிடீஸ் இருவரும் தங்களின் முதல் குழந்தைக்கான எதிர்பார்ப்பில் உள்ளனர். கேப்ரியல்லாவின் மாதந்திர பரிசோதனைக்காக இருவரும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தனர்.
இருவரும் வெள்ளை நிற உடையில் கைகோர்த்தபடி மருத்துவமனையைவிட்டு வெளியில் வந்தனர். அர்ஜூன் ராம்பால் தற்போது தன் மனைவி மெஹர் ஜெசியாவிடமிருந்து விவகாரத்து பெறுவதற்கான முயற்சியில் உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர். 20 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தன் காதலியான கேப்ரியல்லா கர்ப்பமாக இருப்பதாக அர்ஜூன் ராம்பால் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
பாந்த்ராவில் உள்ள ஹோட்டலில் தன் தோழிகளுடன் கேப்ரியல்லா
அர்ஜூன் ராம்பால் முதன் முறையாக கேப்ரியல்லாவை ஐபிஎல் முடிந்தபின் நடக்க்கும் பார்ட்டியில் 2009 இல் சந்தித்தார். அப்போது தன் மனைவி மெஹர் ஜெசியாவுடன் இருந்தார் எனக் கூறப்படுகிறது. பிரிவுக்குப் பின் அர்ஜூன் ராம்பால் கேப்ரியல்லாவுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.
அர்ஜுன் ராம்பால் கேப்ரியல்லா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பதிவு இதோ: