This Article is From Dec 29, 2019

14 தமிழக மீனவர்கள் கைது – 3 படகுகளை பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!!

கைது செய்யப்பட்ட மீனவர்கள் முதலில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

14 தமிழக மீனவர்கள் கைது – 3 படகுகளை பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!!

நெடுந்தீவின் வடக்கு கடல் பகுதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தெரிவித்துள்ளது.

Colombo:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்ததுடன், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையின் நெடுந்தீவுக்கு வடக்கே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டின் கடற்படை  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இலங்கை கடற்படை 14 தமிழக மீனவர்களை அவர்களது 3 படகுகளுடன் சேர்த்து டிசம்பர் 28-ம்தேதி கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்த காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் முதலில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்படையின் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு பணிகள் காரணமாக, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 2018-ல், எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 100 மடங்கு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

வங்கக் கடலில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படைக்கும் நீண்ட காலமாக பிரசனை இருந்து வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வது தொடர்கிறது. சில சமயங்களில் அவர்கள் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் உயிரிழந்தும் உள்ளனர்.

நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்னைக்கு தீர்வுகாண பல்வேறு பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் பிரச்னை தீர்க்கப்படவில்லை.

.