বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 25, 2019

இலங்கையில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு! - உயிரிழப்புகள் இல்லை என தகவல்!

Sri Lanka bomb blast:” Pugoda , Colombo : இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பெரும் பதற்றத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement
உலகம் Edited by

Bomb Blast in Sri Lanka: தாக்குதல் நடத்திய 9 பேரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Highlights

  • நீதிமன்ற வளாகத்திற்கு பின்னால் உள்ள பகுதியில் குண்டு வெடித்துள்ளது.
  • கொழும்புவில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள புகோடா நகரில் குண்டு வெடித்து
  • குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தகவல்.

இலங்கை(Srilanka) தலைநகர் கொழும்பு(Colombo) அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு(Srilanka blasts) நடைபெற்றிருப்பது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை செய்திதொடர்பாளர் ரூவான் குணசேகர கூறும்போது, தலைநகர் கொழும்புவில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள புகோடா நகரில் குண்டு(Sri lanka blast) வெடித்துள்ளது.

நீதிமன்ற கட்டிடத்திற்கு பின்பகுதியில் குண்டுவெடிப்பு நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது இலங்கையில் சமீபத்தில் நடந்த மற்ற குண்டுவெடிப்பு சம்பவம் போன்றது இல்லை சிறிய அளவிலான குண்டு வெடித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement