हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 22, 2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் உட்பட 290 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் முதலில் அளித்த தகவலின்படி, இலங்கை மருத்துவமனையில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

Sri Lanka blasts: இலங்கையில் ஈஸ்டர் பண்டிக்கையன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

Highlights

  • இலங்கை குண்டுவெடிப்பில் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
  • 3 நட்சத்திர விடுதிகளிலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
New Delhi:

ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று, இலங்கையின்(Sri lanka) பல்வேறு இடங்களில் உள்ள சர்ச், நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன(Sri Lanka blasts). இந்த சம்பவத்தில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 450-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய வெளியுரவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறும்போது, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் நான் தொடர்ந்து பேசி அங்குள்ள சூழ்நிலையை குறித்து கேட்டு வருகிறேன். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

தொடர்ந்து உயிரிழந்த மூன்று இந்தியர்களின் விவரங்களை குறிப்பிட்டுள்ளார், லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குறித்து மற்ற விவரங்களை விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று காலை மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள், ரங்கப்பா மற்றும் ஹனுமந்தாராயப்பா ஆவர் என்று தெரிவித்திருந்தார்.

Advertisement

இதேபோல், துபாய்க்கு குடிபெயர்ந்த வந்த கேரளத்தை சேர்ந்த ரசீனா 58 என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

இலங்கையில் நேற்று நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பலர் பங்கேற்றிருந்த நிலையில், அவர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர்.

Advertisement

இலங்கை வெடிகுண்டு சம்பவத்துக்கு(Sri lanka Blast) எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்காத நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்கள் தங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றிவளைத்து தாக்கினர். அப்போது மனிதகுண்டு வெடித்ததில் 3 போலீஸார் உயிரிழந்தனர்.

இதனிடையே தவறான செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்ப் அப் மற்றும் வைபர் உள்ளிட்ட செயலிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

Advertisement

(With inputs from AFP and ANI)

Advertisement