This Article is From Aug 23, 2019

4 மாதங்களுக்கு பின்னர் அவசர நிலையை திரும்பப் பெற்றது இலங்கை அரசு!!

இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதன்பின்னர் குறிப்பிட்ட சில இடங்களில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது.

4 மாதங்களுக்கு பின்னர் அவசர நிலையை திரும்பப் பெற்றது இலங்கை அரசு!!

குண்டுவெடிப்பு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டனர் என போலீஸ் தெரிவிக்கிறது.

Colombo:

இலங்கையில் 258 பேரை பலிகொண்ட குண்டு வெடிப்பு நடந்த 4 மாதங்களுக்கு பின்னர் அங்கு அவசர நிலைமை திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர். 

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம்தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சர்ச் மற்றும் ஓட்டல்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்தது. இதில் 258 பேர் உயிரிழந்தார்கள். 

இதன்பின்னர் குறிப்பிட்ட சில பகுதிகளில் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இடையே தளர்வுகள் நீக்கப்பட்டு மீண்டும் அவசர நிலை நீடிக்கப்பட்டிருந்தது. 

இந்த இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், குண்டுவெடிப்பை நடத்தியவர்களை கைது செய்தல், சுட்டுக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக இலங்கை அரசு கருதியுள்ளது.

இதையடுத்து அவசர நிலை திரும்பப் பெறப்படுவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடப்பதற்கு முன்பாக இந்தியா தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இதனை பொருட்படுத்தாத நிலையில் குண்டுவெடிப்புகள் நடந்திருக்கிறது. இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. 

.