This Article is From May 02, 2019

மீண்டும் குண்டு வெடிப்பு அபாயம்: இலங்கையில் தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனைக்கான அழைப்பு திரும்பப் பெறப்பட்டது

ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். அதன் பின் சர்ச்சுகளில் வழிபாடுகள் நடத்தப்படவில்லை. நாடு முழுவதும் பாதுகாப்புகள் அதிகரித்துள்ளன.

மீண்டும் குண்டு வெடிப்பு அபாயம்: இலங்கையில் தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனைக்கான அழைப்பு திரும்பப் பெறப்பட்டது

குண்டு வெடிப்புக்குப் பின் சர்ச்களில் வழிபாடுகள் நடத்தப்படவில்லை.

Colombo:

இலங்கையில் கத்தோலிக்க சர்ச்சில் மே 5 ஞாயிறு முதல் கூட்டு பிரார்த்தனைகளை மேற்கொள்ள  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் குண்டு வெடிப்புக்கான அச்சுறுத்தல் எழுந்த நிலையில் கூட்டு பிரார்த்தனையை தடை செய்துள்ளனர். 

செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் “தேவாலயங்களில் மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன, அதனால் மே 5 அன்று நடைபெற இருந்த பிரார்த்தனை கூட்டத்திற்கான அழைப்பை திரும்ப பெற்றுள்ளோம்” என்று தெரிவித்தார். 

பாதுகாப்பு படைகளின் ஆலோசனையின் பேரில் ஞாயிற்றுக் கிழமை எந்த சர்ச்சிலும் மக்கள் கூட அனுமதிக்கப்படவில்ல என்றும் தெரிவித்தார். 

ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்தில் நடந்த வெடிகுண்டு  சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். அதன் பின் சர்ச்சுகளில் வழிபாடுகள் நடத்தப்படவில்லை. நாடு முழுவதும் பாதுகாப்புகள் அதிகரித்துள்ளன.

.