Read in English
This Article is From May 22, 2019

தொடர் குண்டுவெடிப்பு : இலங்கையில் எமர்ஜென்சி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!!

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 258 பேர் உயிரிழந்தனர்.

Advertisement
உலகம் Edited by

இலங்கை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Colombo:

தொடர் குண்டுவெடிப்பின் விளைவாக இலங்கையில் எமர்ஜென்சி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்துள்ளார். 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். 3 சர்ச்சுகள் மற்றும் 3 சொகுசு ஓட்டல்கள் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. 

இதில் 258 பேர் உயிரிழந்தனர். இவர்களில் இந்தியர்கள் 8 பேர் உள்பட 30-க்கும் அதிகமான வெளிநாட்டவர்களும் அடங்குவர். சம்பவம் நடந்த ஏப்ரல் 21-ம் தேதிக்கு பின்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்பட்டன. 

மசூதிகள், முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துகள் தாக்குதலுக்கு உள்ளானது. இதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் எமர்ஜென்ஸி தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இன்னும் ஒரு மாதத்திற்கு எமர்ஜென்ஸி நீடிக்கும் என அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்திருக்கிறார். 

Advertisement
Advertisement