This Article is From Apr 22, 2019

கடைசி நிமிடத்தில் முறியடிக்கப்பட்ட இலங்கை விமான நிலைய தாக்குதல்!

Colombo Airport: கொலம்போ விமான நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த புதுரக வெடிகுண்டை, இலங்கை விமானப்படையினர் செயலிழக்க செய்துள்ளனர் என போலீஸ் தெரிவித்துள்ளது.

கடைசி நிமிடத்தில் முறியடிக்கப்பட்ட இலங்கை விமான நிலைய தாக்குதல்!

Sri Lanka Blast: தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் குண்டு வெடித்ததில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இதற்கு முன்பு 8 இடங்களில் குண்டு வெடித்து 290 பேர் உயிரிழந்தனர்
  • இந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன
  • வெடிப்பொருட்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன
Colombo:

கொலம்போ விமான நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த புதுரக வெடிகுண்டை, இலங்கை விமானப்படையினர் செயலிழக்க செய்துள்ளனர் என போலீஸ் தெரிவித்துள்ளது.

போலீஸ் அதிகாரி ஏபிஎஃப்பிடம் கூறும்போது, "வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பைப் வெடிகுண்டுகள் விமான நிலையத்துக்குள் செல்லும் வழியில் இருந்தது. ஈஸ்டர் அன்று நடந்த தாக்குதலின் போது, இந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

"இந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டு, வெடி மருந்துகளை பைப்பில் வைத்துள்ளனர்" என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படை செய்தி தொடர்பாளர் கிஹான் செனிவிரட்னே, "வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வெடிப்பொருட்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன" என்றார்.

இந்த வெடிகுண்டு, எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் குண்டு வெடித்ததில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதில், வெளிநாட்டு மக்களும் அடங்குவர்.

"இந்த பைப் ஆறடி கொண்டது. விமான நிலையம் அருகில் இருக்கும் சாலையில் கண்டெடுக்கப்பட்டது" என செய்தி தொடர்பாளர் கூறினார். மேலும், " இந்த வெடிகுண்டை பத்திரமாக மீட்டு, விமானபடையினர் செயலிழக்க செய்துள்ளனர்" என்றார்.

இலங்கைக்கு வந்து செல்லும் விமானங்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும், மக்கள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விமானத்தில் பயணம் செய்ய வேண்டியவர்கள், 4 மணி நேரம் முன்பு விமான நிலையம் அடைய வேண்டியுள்ளது. ஏனெனில், அனைத்து மக்களும் நெடிய சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இலங்கை உள்நாட்டு போரில் லட்ச கணக்கான மக்கள் இறந்தனர் இப்போது இந்த தாக்குதல் இலங்கை மக்களுக்கு வலிமையான நினைவுகளைத் தூண்டியுள்ளது.

.