அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சில நாட்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்
Colombo: இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று, மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சில நாட்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இந்நிலையில், இன்று அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் எடுத்த வாக்கெடுப்பில் அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இலங்கை அதிபர் சிறிசேனா முன்னர் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்திருப்பதால், ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நியமிக்கப்படுவார் என்று சொல்வதற்கில்லை. அதிபர் சிறிசேனா தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்.