Read in English
This Article is From Apr 26, 2019

இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : பாதுகாப்பு துறை அமைச்சர், காவல்துறை பொது ஆணையர் பதவி விலகினர்

குண்டுவெடிப்பு தாக்குதலினால்  நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹேமாசிறி பெர்னாண்டோ நேற்று பதவி விலகினார். 

Advertisement
உலகம் Edited by

இலங்கை குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் (File)

Colombo:

ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்பு தோல்வியடைந்ததையடுத்து இலங்கையின் காவல்துறை உயரதிகாரியான காவல்துறை பொது ஆய்வாளர் புஜித் ஜெயசுந்தரா தன் பதவியை விட்டு விலகியுள்ளார் என்று  இலங்கை நாட்டு அதிபர் கூறியுள்ளார்.

"காவல்துறை பொது ஆணையர் தன் பதவியை விட்டு விலகியுள்ளார். தன்னுடைய பணித்துறப்பு அறிக்கையை பாதுகாப்பு அமைச்சகத்திடம் கொடுத்துள்ளார். விரைவில் மற்றவர் பணிக்கு பரிந்துரைக்கப்படுவார்" என்றும் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.  

சிறிசேனா பரிந்துரைக்கும்  நபரை அரசியலமைப்பு மன்றமும் உறுதி செய்ய வேண்டும்.

Advertisement

குண்டுவெடிப்பு தாக்குதலினால்  நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹேமாசிறி பெர்னாண்டோ நேற்று பதவி விலகினார். 

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 3 பெண்கள் உட்பட, 6 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Advertisement