மைதிரிபால சிறிசேனா மகிந்தா ராஜபக்ஷேவை பிரதமராக கடந்த அக்.2 ஆம் தேதி அறிவித்தார்.
ஹைலைட்ஸ்
- மைதிரிபால சிறிசேனாவின் கட்சி அவருக்கு பெரும்பான்மை இல்லை என்று அறிவித்தது
- நாடளுமன்றம் இன்று நள்ளிரவிலிருந்து கலைக்கப்படுவதாக கையெழுத்திட்டார்.
- ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Colombo: இலங்கையில் அதிபர் மைதிரிபால சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்நிலையில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடளுமன்றத்தில் அதிபர் மைதிரிபால சிறிசேனாவால் பிரதமாராக நியமிக்கப்பட்ட ராஜபக்ஷேவுக்கு பெரும்பான்மை இல்லையென்று தெரிகிறது.
இதனால் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடளுமன்றத்தை கலைக்க சிறிசேனா கையெழுத்திட்ட உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் ஏ.எஃப்.பி-க்கு தெரிவித்துள்ளார்.