This Article is From Apr 26, 2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!

Sri lanka blast: இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலானோர் தேசிய ஜவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!

bomb blast sri lanka : பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளளனர்.

Colombo:

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 3 பெண்கள் உட்பட, 6 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகும் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், இலங்கையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவத்தினரும் நாடு முழுதும் தீவிர பாதுகாப்பு பணியிலும் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.

11s6kie

இதனிடையே, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள புகோடா நகரில் நேற்று நீதிமன்ற வளாகம் அருகே குண்டு வெடித்தது. மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நடைபெற்றதால் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 3 பெண்கள் உட்பட, 6 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல் கிடைத்தால், தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 76பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பலருக்கு உள்ளூர் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவுறுத்தலின் பேரில் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

.