This Article is From Jun 15, 2018

இறுதிப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஆணையம்: இலங்கை கேபினெட் ஒப்புதல்

ஒரு லட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்ட இந்த போரில், 20 ஆயிரம் பேர் காணாமல் போனதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது

இறுதிப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஆணையம்: இலங்கை கேபினெட் ஒப்புதல்

ஹைலைட்ஸ்

  • இறுதிப் போரில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்
  • 20 ஆயிரம் பேர் காணவில்லை என இலங்கை அரசு தகவல்
  • இழப்பீடு வழங்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது
30 ஆண்டுகளாக இலங்கைத் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும்  இடைடேயே நடந்த போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க, ஆணையம் அமைப்பதற்கான மசோதாவுக்கு இலங்கை கேபினெட் ஒப்புதல் அளித்துள்ளதாக கேபினெட் சபாநாயகர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்ட இந்த போரில், 20 ஆயிரம் பேர் காணாமல் போனதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

தனித் தமிழ் ஈழம் வேண்டி ராணுவத்தை எதிர்த்து போரிட்ட விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தோடு முடிவுக்கு வந்தது.

“ஐநா சபையின் மனித உரிமை கவுன்சிலின் பரிந்துரையின்படி, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க இலங்கை பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக “ சேனரத்னே கூறினார்

போர் குறித்து நீதி விசாரணை நடத்த சர்வதேச அளவில், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஐநாவின் மனித உரிமை கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று, இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனா, போரில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைக் சேகரிக்க, 7 பேர் கொண்ட OMP என்ற குழுவை ஃபிப்ரவரி மாதம் அமைத்தார். அந்த அமைப்பு மார்ச் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு என்ன என்பதை அமைக்கப்படவுள்ள குழுவே முடிவு செய்யும் என சேனரத்னே கூறியுள்ளார்.

இறுதிக்கட்டப் போரில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக, இலங்கை ராணுவத்தின் மீதும் விடுதலை புலிகள் மீதும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டியது. ஆனால் அதை இலங்கை ராணுவம் மறுத்தது. சர்வதேச நீதி விசாரணை ஆணையம் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.