Read in English
This Article is From Nov 01, 2018

மீன் வலையை பிடிங்கி தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் மீன் வலையை பிடிங்கிக்கொண்டு கல்வீசி விரட்டி அடித்தனர். இதனால் மீனவர்கள் மீன்களின்றி இன்று காலை திரும்பினார்கள்

Advertisement
Tamil Nadu

இன்று இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

Rameswaram:

தமிழகத்திலிருந்து 50 படகுகளில் மீன் பிடிக்கச்சென்ற 3000 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் விரட்டியடித்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் சங்க தலைவர் பேசுகையில் இலங்கை கடல் பகுதிக்கு சொந்தமான இடத்தில் மீன் பிடித்ததாக கூறி மீன்பிடி வலைகளை பிடிங்கிக் கொண்டு கல்வீசி விரட்டியடித்தாக தெரிவித்தார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர் பி.சேசுராஜா கூறுகையில், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமையன்று 700 படகுகளில் கட்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மிரட்டியுள்ளனர்.

மேலும் 50 படகுகளிலிருந்த மீன்வலைகளை பிடிங்கிக் கொண்டு மீனவர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இதனால் இன்று காலை அவர்கள் மீன்கள் எதுவுமின்றி திரும்பி வந்தனர் என்றார்.

Advertisement

உடனே, மத்திய அரசை அணுகிய சேசுராஜா இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரினார். 1974 இந்திய-இலங்கை உடன்படிக்கையின் படி கச்சத்தீவு மற்றும் அருகிலிருக்கும் சிறு தீவுகளில் மீன் பிடிக்க தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறினார்.

செவ்வாயன்று ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement
Advertisement