இலங்கை குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் (File)
COLOMBO: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கும் ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்பிற்கு காரணமான 140 பேரைத் தேடி வருவதாக தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு தீவிரவாத இயக்கத்துடன் சில இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். வரவிருக்கும் தாக்குதல் குறித்து உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தகவலை பகிர்ந்து கொள்ளவில்லை.
உளவுத்துறை அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர்க்குற்றவாளிகளின் மீது மட்டுமே கவனம் செலுத்தியதால் இந்த சம்பவத்தில் உளவுத்துறை அதிகாரிகள் பலவீனமடைந்து விட்டதாக தெரிவித்தார்.
ராணுவத்தினர் உள்நாட்டுப் போரை தீவிரமாக நடத்திய தமிழ் விடுதலைப் புலிகளை மட்டுமே கண்காணித்து வந்ததில் பாதுகாப்புத் தவறுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)