This Article is From Dec 21, 2018

புதிய அமைச்சரவைக்கு பதவிபிராமணம் செய்து வைத்தார் சிறிசேனா!

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது புதிய அமைச்சரவையை இன்று அறிமுகம் செய்தார்

Advertisement
உலகம் Posted by

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது புதிய அமைச்சரவையை இன்று அறிமுகம் செய்தார். இரண்டு மாத கால சமநிலையற்ற அரசியல் சூழலுக்கு பிறகு மீண்டு பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றபிறகு இந்த அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

29 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையை ரணில் தேர்ந்தெடுத்தார். "இந்த அமைச்சர்கள் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி அதிபர் சிறிசேனா முன்பு பதவியேற்றது" என்ற தகவலை அதிபரின் செய்தித்தொடர்பாளார்கள் அறிவித்தனர்.

அக்டோபர் 26ம் தேதி ரணிலை நீக்கி ராஜபக்சேவை பிரதமராக்கினார் சிறிசேனா. அது இலங்கையில் அமைதியற்ற அரசியல் சூழலை உருவாக்கியது. அப்போது ராஜபக்சே தலைமையில் 30 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

ஆனால் தற்போது பிரதமராகியுள்ள ரணில் அடுத்த 3 மாதங்களுக்கான பட்ஜெட்டை தக்கல் செய்ய வேண்டும். ஏனென்றால் அரசியல் சமநிலயற்ற சூழலால் அரசாங்கம் முடங்கும் சூழல் தற்போது இலங்கையில் உருவாகியுள்ளது.

Advertisement

"சிறிசேனா ராஜபக்சேவை நியமித்தது, ரணிலை நீக்கியது அனைத்தும் சட்டவிரோதமானது" என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ராஜபக்சேவை பதவி விலக சொல்லியும் வலியுறுத்தியது. பிறகு பெரும்பான்மையை நிரூபித்த ரணில் மீண்டும் பிரதமர் பதவிக்கு திரும்பினார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement