இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
Sri Lanka Blast: பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமியின் ட்விட் ஒன்று சர்ச்சைய ஏற்படுத்தி வருகிறது. இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை மையப்படுத்தி அவர் ட்விட் செய்துள்ளார்.
சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டர் பதிவில், ‘இலங்கையில் பெரும் தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கிறது. எனவே மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது நம்முடைய தேவையாக இருக்கிறது. காங்கிரசை பொறுத்தவரையில் தீவிரவாதிகளின் நண்பன் போல செயல்படும். இன்னும் கொஞ்ச நேரத்தில் இலங்கையில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்து தீவிரவாதமே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அறிவிப்பு வெளியிடுவார்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக தமிழக தேர்தல் குறித்து ட்விட் செய்திருந்த சுப்ரமணியன் சாமி, தமிர்நாட்டில் உள்ள தேசியவாதிகள் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் சுப்ரமணியன் சாமியின் கருத்து பல விமர்சனங்களை ஏற்படுத்தியது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)