கைது செய்யப்பட்ட ரணதுங்கா விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Colombo: இலங்கை பெட்ரோலியத் துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கடந்த சனிக்கிழமையன்று சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தார். இதற்கு முன்பாக பிரதமர் பொறுப்பில் இருந்து ரனில் விக்ரமசிங்கேவை நீக்கி அவருக்கு பதிலாக ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, ரனில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் காணப்படுகிறது.
இதற்கிடையே கடந்த ஞாயிறன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா அவரது அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்தார். அப்போது, அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ரணதுங்காவின் பாதுகாவலர் அவரை தடுத்து நிறுத்தியவர்களை சுடத் தொடங்கினார்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரணதுங்கா கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)