This Article is From Apr 25, 2019

இலங்கையில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரின் தந்தை கைது! விசாரணை தீவிரம்!!

நறுமணப் பொருட்கள் வியாபாரியான முகமதுயூசுப் இப்ராகிமின் 2 மகன்கள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சின்னமான் கிராண்ட் ஓட்டலில் அவர்கள் 2 பேரும் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இலங்கையில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரின் தந்தை கைது! விசாரணை தீவிரம்!!

உயிரிழந்தவர்களின பெரும்பாலானோர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள்

Colombo:

இலங்கை தற்கொலைப்படை தாக்குதலில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பின்போது 6 இடங்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இதனை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தாக்குதலை நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். 

இல்ஹாம் அகமது இப்ராகிம் மற்றும் இம்சாத் அகமது இப்ராகிம் ஆகியோர் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டனர் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருவரும் சாங்ரி லா மற்றும் சின்னமான் கிராண்ட் ஆகிய ஓட்டல்களில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்களின் தந்தை முகமது யூசுப் இப்ராகிம் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். 
 


இந்த 2 பேரில் இல்ஹாம் என்பவர் மூத்தவர். அவர்தான் சின்னமான் கிராண்ட் ஓட்டல் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல்களை சி.என்.என். நிறவனத்திற்கு இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ளார். 

ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இலங்கையை சேர்ந்தவர்கள். முதலில் இந்த சம்பவத்திற்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் காரணம் என தகவல்கள் வெளியானது. பின்னர் இதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இன்டர் போல், ஸ்காட்லாந்து யார்டு, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ. உள்ளிட்டவை விசாரணை நடத்தி வருகின்றன. 

.