This Article is From Nov 14, 2018

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

இலங்கையில் கடந்த மாதம் 26-ம் தேதி ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

இலங்கை நாடாளுமன்றத்தின் தோற்றம்

Colombo:

இலங்கையில் அரசியல் குழப்பத்தில் திடீர் திருப்பமாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் கடந்த மாதம் 26-ம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தார். இதன் பின்னர் மகிந்த ராஜபக்சே நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்படத் தொடங்கியது. இந்த சூழலில் வரும் 14-ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டி அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காண அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கிடையே பெரும்பான்மையை நிரூபிக்க நிர்பந்தம் ஏற்பட்ட சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தார்.

ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என உறுதியாக தெரிந்த பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நடவடிக்கை எடுத்து ரணில் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன எடுத்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், வரும் ஜனவரி 5-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்லுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நவம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிப்புக்கு நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை.

.