This Article is From Sep 03, 2019

Kashmir: உயிரிழப்பு இல்லை என்பதால் அமைதி நிலவுவதாக அர்த்தமில்லை: ஸ்ரீநகர் மேயர் அதிரடி பேச்சு

ஜேகேபிசியின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ள ஜூனைத் அஸிம் மாத்து, காஷ்மீரில் பிரதான அரசியல் தலைவர்கள் கைது செய்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் மத்திய அரசை அவர் கடுமையாக சாடினார்.

ஜம்மு-காஷ்மீரின் மக்கள் மாநாட்டு கட்சி செய்தித் தொடர்பாளராகவும் ஜூனைத் அஸிம் மாத்து உள்ளார்.

New Delhi:

காஷ்மீரின் சாலைகளில் உடல்கள் சிதறிக்கடக்கவில்லை என்பதால் அங்கு அமைதி நிலவுவதாக அர்த்தமில்லை என ஸ்ரீநகர் மேயர் ஜூனைத் அஸிம் மாத்து தெரிவித்துள்ளார். 

உணர்வுகளின் மீது ஒரு பெரும் அடக்குமுறையை அமல்படுத்துவதன் மூலம் நிலைமை சாதாரமாணது என்று அர்த்தமல்ல, பாஜக அரசின் தடுப்புக்காவல் கொள்கை முற்றிலும் செயல்பாட்டுடன் இருப்பதாக தெரிகிறது, "என்று அவர் கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரின் மேயர்களுக்கு, அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டு மத்திய அரசு உத்தரவிட்டது. 

எனினும், ஜம்மு-காஷ்மீரின் நிலைமையை மத்திய அரசு கையாளுவது குறித்து தொடர்ந்து ஸ்ரீநகர் மேயர் ஜூனைத் அஸிம் மாத்து விமர்சித்து வருகிறார். ஜேகேபிசியின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ள ஜூனைத் அஸிம் மாத்து, காஷ்மீரில் பிரதான அரசியல் தலைவர்கள் கைது செய்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் மத்திய அரசை அவர் கடுமையாக சாடியுள்ளார். 

பல ஆண்டுகளாக, காஷ்மீரில் உள்ள அரசியல் ஆர்வலர்கள் பயங்கரவாத சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்தும், வன்முறையையும் பிரதான நீரோட்டத்தில் தப்பிப்பிழைக்கிறார்கள். ஆனால் இன்று, அவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள், "என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், ஜம்மு-காஷ்மீரில் "தங்களின் அன்புக்குரியவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத குடும்பங்கள் இன்னும் நிறைய உள்ளன" என்று வேதனை தெரிவித்தார். 

முன்னதாக, காஷ்மீரில் தொலைபேசி மற்றும் மொபைல் இணைய சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நியாயப்படுத்தி கூறியுள்ளார், பயங்கரவாதிகளுக்கு இடையிலான தொடர்புகளை நிறுத்த இது தேவை என்று கூறினார்.

"காஷ்மீர் முழுவதையும் பாதிக்காமல் போராளிகளுக்கிடையேயான தகவல்தொடர்புகளை நிறுத்த முடியாது. ஒருபுறம் மக்களுக்கு இணைய சேவை வழங்கிவிட்டு, மறுபுறம் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் இடையிலான தொடர்புகளை நான் எவ்வாறு துண்டிப்பது, ஆனால் மற்றவர்களுக்கு இணைய சேவையை வழங்குவது எப்படி என்பதை அறிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைவேன் என்று அவர் கூறியிருந்தார்.

செய்தி நிறுவனமான பிடிஐ தகவலின் படி, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புத் தடைகள் குறித்து அமெரிக்கா உட்பட பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஃபெடெரிகா மொகெரினி இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் சமீபத்தில் அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தபோது, "காஷ்மீர் மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மீட்டெடுக்க" வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

எனினும், வரும் நாட்களில காஷ்மீரில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

.