Srinagar: இந்த சீசனின் மிகவும் குளிர்ந்த நாளான நேற்று, மைனஸ் 7.6 டிகிரி குளிரை ஜம்மூ மற்றும் காஷ்மீர் மாநிலம் எதிர்கொண்டது.
கடந்த டிசம்பர் மாதம் 7 நாள் 1990 ஆம் வருடத்தில் பெய்த 8.8 டிக்கிரி பனிப்பொழிவை விட இந்த ஆண்டு பனிப்பொழிவின் அளவு அதிகரித்துள்ளது. ஸ்ரீநகரில் வெப்பநிலை சுமார் மைனஸ் 7.6 ஆக குறைந்து இருக்கிறது.
மேலும் ஸ்ரீநகரில் அமைந்துள்ள நீர்நிலைகள் அனைத்தும் பனிப்பொழிவால் உரைந்து காணப்பட்டன.
பாஹால்காமில் மைனஸ் 8.3 டிகிரியும், குல்மார்கில் மைனஸ் 9 டிகிரி பனிப்பொழிவும் காணப்பட்டது. மேலும் கார்கிலில் மைனஸ் 16.2 ஆக குளிர் இருந்தது.
இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரை பொருத்தவரை திராஸ் என்னும் இடத்தில் அதிகப்படியான குளிர் இருந்தது.
மேலும் ஜம்முவில் பல இடங்களில் மைனஸ் 2 முதல் மைனஸ் 3.5 வரை வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.