This Article is From Jun 04, 2020

மால்கள், வழிபாட்டுத் தலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

ஓட்டல்கள் வாடிக்கையாளர்களின் பயண குறிப்பேட்டை பத்திரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயணிகளின் லக்கேஜ்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். 

மால்கள், வழிபாட்டுத் தலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை  வெளியிட்டது மத்திய அரசு

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் நோய்க்கட்டுப்பாடு பகுதிகளுக்கு பொருந்தாது.

New Delhi:

ஜூன் 8-ம்தேதி முதல் மால்கள், ஓட்டல்கள், வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, இன்று அதுதொடர்பான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மால்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை பதிவு செய்தல், வழிபாட்டுத் தலங்களில் சிலைகளை தொடக்கூடாது  என்பது உள்ளிட்ட விதிகள் கடைபிடிக்க வேண்டும்.

மத்திய  அரசு வெளியிட்டுள்ள இந்த தளர்வுகளும், விதிமுறைகளும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மால்கள், ஓட்டல்கள், வழிபாட்டுத் தலங்களில் வெப்பநிலை மானிகளைப் பயன்படுத்திய காய்ச்சல்  சோதனை நடத்தப்பட வேண்டும். இருப்பினும், திரையரங்குகள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம், சிறுவர்களுக்கான கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை பூட்டியே இருக்கும். 

மால்களில் 6 அடி தூரத்திற்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அடிக்கடி தொடுதலுக்கு உள்ளாக்கப்படும் கதவுகள், கைகழுவும் பகுதி உள்ளிட்டவை தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 

உணவு விடுதிகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். முடிந்தவரை உணவை பார்சலாக கொண்டு செல்வதற்குத்தான் உணவகங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

உணவு டெலிவரி செய்வோர் ஒவ்வொரு டெலிவரிக்கு முன்பாகவும் வெப்பநிலைமானி கொண்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். 

மால்கள், அலுவலகங்களில் ஏ.சி.யை 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பாதிப்பு எளிதில் தொற்றிக்கொள்ளும் என கருதப்படுவோர், கர்ப்பிணிகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

ஓட்டல்கள் வாடிக்கையாளர்களின் பயண குறிப்பேட்டை பத்திரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயணிகளின் லக்கேஜ்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். 

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் ஆரோக்ய சேது ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

.