பள்ளிகளில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மொபைல் திருடன் என்ற சந்தேகத்தின்பேரில் பாலசுப்ரமணி என்ற 15 வயது சிறுவனை கும்பல் ஒன்று பிடித்தது. பின்னர் அவனை கம்பத்தில் கட்டி வைத்து, கட்டையால் அடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் சிறுவன் படுகாயம் அடைந்தார். பின்னர், சிறுவனை கட்டிய கயிற்றை அவிழ்த்து விட்டு அந்த கும்பல் சென்று விட்டது. அடுத்த சில மணி நேரத்திற்கு பின்னர் சிறுவன் பாலசுப்ரமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று நடந்தது.
இந்த நிலையில் சிறுவனை அடித்துக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகரிகம் கொண்ட சமூகத்தில் சிறுவனை அடித்துக் கொன்றது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது.
சிறுவனைக் கொன்றவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். பள்ளிகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். சட்டம் எவரையும் கொல்வதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)