தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சற்று நலிவுற்றதாக வந்த செய்தியை அடுத்து, தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல அரசியல் தலைவர்கள், நலன் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறியிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் “தலைவர் கலைஞரின் உடல் நலம் குறித்து என்னை அழைத்து விசாரித்த குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி அவர்களுக்கு, தி.மு.க சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உதவு முன் வந்த அவர்களுக்கு நன்றி. தலைவருக்கு, சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் உடல் நலம் தேறி, அவரே அனைவருக்கும் நன்றி சொல்வார்” என்று கூறியிருக்கிறார்.
மற்றொரு ட்வீட்டில் “கருணாநிதியின் உடல் நலம் விசாரித்த ராகுல் காந்தி, சீத்தாராம் எச்சூரி மற்றும் டி.ராஜா அவர்களுக்கும் நன்றி. உங்கள் அக்கறையும், வாழ்த்துக்களும் தலைவர் உடல் நலம் மீண்டு வர உதவும். கூடிய விரைவில் அவர் அனைவரையும் சந்திப்பார் என்று நம்புகிறோம்” என்றும் பதிவிட்டுள்ளார்.