This Article is From Sep 11, 2018

உயர்ந்து வரும் எரிபொருள் விலை; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை!

வட மாநிலங்களில் பலவற்றிலும், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் பந்தின் தாக்கம் அதிகமான உணரப்பட்டது

Advertisement
இந்தியா Posted by

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘மத்திய அரசு உடனடியாக கலால் வரியை குறைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்துக்கு எதிராக நேற்று காங்கிரஸ் இந்திய அளவில் ‘பாரத் பந்த்’ நடத்தியது. இந்த பந்துக்கு திமுக உள்ளிட்ட 21 எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. வட மாநிலங்களில் பலவற்றிலும், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் பந்தின் தாக்கம் அதிகமான உணரப்பட்டது. 

இந்நிலையில் எரிபொருள் விலையேற்றம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின், ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால், இது குறித்து மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எந்த வித உணர்வும் இல்லை. பார்த் பந்தில் மத்திய அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை பார்க்க முடிந்தது. மத்திய அரசு உடனடியாக கலால் வரியைக் குறைத்து, மக்கள் அனுபவித்து வரும் சுமையைக் குறைக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

Advertisement

அவர் மேலும், ‘தமிழக மக்களின் நலன் கருதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று ட்வீட்டியுள்ளார். 

Advertisement